கோவில்பட்டியில் அம்மா உணவக இட்லி, ஓட்டலுக்கு விற்பதாக புகார்
ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டி மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது,
ஜெயலலிதா இறப்புக்கு பின்ன்ர் அதிமுக ஆட்சிமாறி திமுக பொறுப்பு ஏற்றபோதும் இந்த திட்டம் தொடரப்பட்டது, தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வரும் நிலையிலும் அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கிறது. கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சமீப காலமாக காலை 7 மணிக்கு தொடங்கும் இட்லி விற்பனை 30 நிமிடங்களில் விற்பனை ஆகி விடுகிறது,. அதன்பிறகு வருபவர்களுக்கு இட்லி இல்லை என்று சொல்லப்படுகிறது.
அம்மா உணவகத்தில் பார்சல் தருவதில்லை. அங்கு சாப்பிட மட்டும் தான் உணவு பொருட்கள் விற்பனை உண்டு.ஆனால் கோவில்பட்டி அம்மா உணவகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
அம்மா உணவகத்தில் ஒரு நாளைக்கு 1200 iஇட்லிகள் விற்பனை செய்ய வேண்டும். சாப்பிட வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லிவிட்டு மொத்தமாக 100 இட்லி என்ற அளவில் பார்சலாக சிலர் வாங்கி செல்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது.

அந்த இட்லி தனியார் நடத்தும் ஓட்டல்களில் 10 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி உணவாக பொறுப்பாளரிடம் கேட்டால் அதிகாரிகள் தான் இப்படி செய்ய சொல்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
இது பற்றி உயர் அதிகாரிகள் மட்ட அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது,







