தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (வயது 84). இவர் இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தற்போது துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் . தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் […]
தமிழகக் காவல் துறையின் புதிய சட்டம்-ஒழுங்கு தலைமை இயக்குநராக(DGP) மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியன்று ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடத்தப்பட்டது. தேர்தல் காலத்தின் போது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்திற்கான தற்காலிகப் பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுப் பணிகளை கவனித்து வந்தார். தேர்தல் […]
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளதுடன், மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் இப்படித் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் கொடூரக் குற்றச்சம்பவங்களைப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் ‘சட்டம் ஒழுங்கு’ என்ற ஒன்று தற்போதைய சூழலில் இருக்கிறதா இல்லையா என்ற பலத்த சந்தேகமும் அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த ‘சோபா மாடல்’ […]
திருச்செந்தூர் கோவிலில் முடி காணிக்கை செய்வோரிடம் லஞ்சம் வாங்கிய 2 பணியாளர்களின் தொழில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:_ திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முடியிறக்கும் பணியாளர்கள் சிலர் முறைகேடாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்வதாக 28.5.2026 அன்று தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேற்படி வீடியோ தரவுகளை ஆய்வு செய்ததில் அவ்வாறு கையூட்டாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்த முடி இறக்கும் பணியாளர்கள் .பா.சங்கர் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை […]
சிங்கப்பெண் ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? – கனிமொழி எம்.பி கேள்வி
/த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். சிங்கப்பெண் அதிரடிப்படையின் தொடக்கவிழா 27ம் தேதி ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடக்க […]
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், குற்றாலத்தில் விரைவில் குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிக்கரைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. இதில் பழைய குற்றால அருவிக்கரையில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். தற்போது பழைய குற்றால அருவியில் தண்ணீர் மிகவும் குறைவான அளவே விழுகிறது. இதனால் அங்கு சுற்றுலா […]
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை,வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள்,வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேரதலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து […]
திருச்செந்தூர் கோவிலில் விரைவு தரிசனத்துக்கு அறநிலையத்துறை அமைச்சரிடம் ரூ.4 ஆயிரம் வாங்கிய அர்ச்சகர்கள்;
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன,. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது முறைகேடான வழியில் விரைவான தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல சில அர்ச்சகர்கள் ரூ.4,000 கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக ஜி-பே (GPay) மூலம் ரூ.4,000 பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் […]
த.வெ.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்ததில் பண பரிமாற்றம்; அ.தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல்… ஆகிய 3 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர் அதற்கான கடிதத்தையும் தங்கள் கைப்பட எழுதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். ராஜினாமா செய்த கையோடு அந்த 3 பேரும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காலையில் […]







