பழைய குற்றாலம் அருவியில் கட்டணம் வசூல் ரத்து : வனத்துறை அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், குற்றாலத்தில் விரைவில் குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிக்கரைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. இதில் பழைய குற்றால அருவிக்கரையில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றது.

இதை தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.
தற்போது பழைய குற்றால அருவியில் தண்ணீர் மிகவும் குறைவான அளவே விழுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை உள்ளது.
ஏற்கனவே பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்து இருந்தது,. இதற்கு பல்வேறு தரபினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கட்டணம் வசூல் முறையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுபினர்.,

இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் கட்டணம் வசூலிக்கும் முறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதது,, அருவியில் தண்ணீர் விழும்போதும் பழைய நடைமுறைப்படியே கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.







