திருச்செந்தூர் கோவிலில் முடி காணிக்கை செய்வோரிடம் லஞ்சம் வாங்கிய 2 பணியாளர்களின் தொழில் உரிமம் தற்காலிக ரத்து
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:_
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முடியிறக்கும் பணியாளர்கள் சிலர் முறைகேடாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்வதாக 28.5.2026 அன்று தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேற்படி வீடியோ தரவுகளை ஆய்வு செய்ததில் அவ்வாறு கையூட்டாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்த முடி இறக்கும் பணியாளர்கள் .பா.சங்கர் மற்றும் வே நாகராஜ் ஆகிய இரண்டு முடி இறக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முடி காணிக்கை பிரிவு கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.
அதன் படி கட்டணமில்லை முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் கையூட்டு பெற்று திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய முடியிறக்கும் பணியாளர்கள் பா.சங்கர் மற்றும் வே நாகராஜ் ஆகியோரின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது.
மேற்படி முடியிறக்கும் பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் காலத்திற்கு உரிய முடி காணிக்கை பங்குத் தொகை மற்றும் ஊக்கத்தொகை ஆகியன மாதாந்திர பட்டியலில் நிறுத்தம் செய்து பட்டியலை சமர்ப்பிக்க முடிகாணிக்கை பிரிவு கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது.

மேலும் முடி இறக்கும் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபடா வண்ணம் அவ்வப்போது ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடிகாணிக்கை பிரிவு கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம் வாங்கிய திருச்செந்துார் கோவில் பாதுகாவலர்கள் 2 பேர் டிஸ்மிஸ்; செய்யப்பட்டனர். அர்ச்சகர் ஐயப்பன் என்பவர் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டது,
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







