கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நினைவு தினம் ஆண்டுதோறும் மே 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1922-ல் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்த இவர், தனது எழுத்துக்களால் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியலையும் வட்டார வழக்கையும் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளப்படுத்தியவர். கோவில்பட்டியில் உள்ள கி.ரா நினைவரங்கத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு 5 வது நினைவு தினமான இன்று(மே 17) கோவில்பட்டி நகராட்சி சேர்மன் ஆர்.எஸ் ரமேஷ் தலைமையில் ரோட்டரி […]
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த மாத இறுதியில் குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன.இதற்கிடையே, பழைய குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு ரூ.20 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை அறிவித்தது. அதன்படி, பழைய […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு சென்று முதல்-அமைச்சர் விஜய்யை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் […]
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர்அர்லேகரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடுஉள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள்ஒதுக்கீடு தொடர்பான […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நியமித்திருந்தார். இன்று (மே 16) அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை மு க ஸ்டாலின் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:- *நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். *தனிப்பட்ட விருப்பு […]
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, வெங்கடாசலபுரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அதிதூதர் புனித மிக்கேல் திருத்தலம் மற்றும் புனித பரலோக அன்னை ஆலயத்தில் இவ்வாண்டின் திருத்தல ஆண்டு பெருவிழா கடந்த மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், நற்கருணை ஆசீர் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் நாள் திருவிழாவன்று அதிகாலை 4:30 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆலயத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து அதிகாலை […]
சட்டமன்றக்குழு தலைவர்,. அதிமுக கொறடா விவகாரம் நிலுவையில் உள்ளது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறி உள்ளார். சட்டசபை தேர்தலில் தோற்றதால் அதிமுகவில் உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஒரு தரப்பாகவும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பும் சட்டமன்ற குழு தலைவர் பதவியை பிடிக்க முயற்சித்து வருகிறது. இது குறித்து இரண்டு தரப்பினரும் சபாநாயகரிடம் கடிதங்களை கொடுத்துள்ளனர். இந் நிலையில், அதிமுகவினர் அளித்துள்ள கடிதங்கள் ஆய்வில் […]
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் மறுத்தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மறுத்தேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் .
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,ஜேசிஐ சார்பில் புத்தகத் திருவிழா கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஷ்வா மீட்டிங் ஹாலில் இன்று தொடங்கியது. புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்து செல்வம், வி.எஸ்.பாபு,சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா வரவேற்றார். புத்தக கண்காட்சியினை கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹுமான்சூ மங்கள் திறந்து […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மே மாத பராமரிப்பு பணிகள் 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் விவரம்: கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம், கோவில்பட்டி […]







