தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர்அர்லேகரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடுஉள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள்ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;-
*முதல்-அமைச்சர் விஜய் – பொதுத்துறை, பொது நிர்வாகத்துறை, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள் துறை, காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை
*அமைச்சர் செங்கோட்டையன் – நிதித்துறை
*அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமர் – மின்சாரம், மற்றும் நீதித்துறை.

*அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் – சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி, குடும்பநலத்துறை.
*அமைச்சர் ஆனந்த் – ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை
*அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை.
*அமைச்சர் கீர்த்தனா – தொழில்துறை
*அமைச்சர் டி.கே.பிரபு – இயற்கை வளத்துறை.
*அமைச்சர் ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை.
*அமைச்சர் வெங்கராமன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…







