தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன். இவர் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி நேற்று சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பனை தொழிலாளியை சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார். வாக்குவாதத்தின்போது பனை தொழிலாளி தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பனை தொழிலாளி தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கோவில்பட்டி யில் இன்று விழிப்புணர்வு ஆக்கி போட்டி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இப்போட்டியை தொடக்கி வைத்து, விழிப்புணர்வு உரையாற்றினார். ஆட்சியர் விஷு மகாஜன் பேசியதாவது:- “நான் எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் நாள்தோறும் ஆக்கி விளையாடுவேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஹாக்கி மைதானத்தைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. […]
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அங்கிருந்து வேனில் திருநெல்வேலிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார், வழிநெடுக பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்,நெல்லை தேர்தல் பிரசார கூட்டத்தில் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் முழு பவர் இருந்திருந்தால், இந்த கூட்டம் நடந்திருக்காது. இப்போது அவர் அதிகாரம் இல்லாத முதல்-அமைச்சர். அதனால், ஈசியாக வர முடிந்தது. நம் மீது எவ்வளவோ அவதூறு […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ரங்காபுரத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் பசுபதி, ரவீந்தர், வசந்த பாலன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் ரங்காபுரத்திற்கு சென்றனர். அங்கு செந்தில் என்பவரது வீட்டை அதிகாரிகள் சோதனை […]
பாமக, உள்கட்சி பிரச்சினை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாதம் 26-ந்தேதி தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவில், “சட்டம் அனுமதித்தால், இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ், தேர்தல் ஆணையத்தை அணுகலாம். அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடி வெடுக்கலாம்” என்றும் கூறியிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் […]
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் உள்ள மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் சேட். இவரது மகன் மணிகண்டன் (வயது 32). விவசாயியான இவர் பனையேறும் தொழிலாளியாகவும் உள்ளார். ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக ரகசிய புகார் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் 2 போலீசார் மருதம்புத்தூர் காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு பனைமரத்தில் பதநீர் எடுப்பதற்காக பானை வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த போலீசார், மரத்தின் […]
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வெளியிடும் தேர்தல் விளம்பரங்களைக் கண்காணிக்க “ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு” (MCMC) அமைக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களை வெளியிடும் முன் இந்தக் குழுவிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மின்னணு மற்றும் சமூக ஊடகங்களுக்கான விதிகள்: தொலைக்காட்சி, கேபிள் […]
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட […]
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது…. இதனால், ஜெட் விமான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஜெட் விமான எரிபொருள் விலையை அதிகபட்சமாக 25 சதவீதம் என மத்திய அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. […]
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டல தலைவர் ஆர்.செல்வராஜ், மண்டல் செயலாளர் வி.கற்பூரராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எங்கள் சமுதாய கோரிக்கைகள் * வடுகர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் கம்மவார் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்கவேண்டும். *தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் எங்கள் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினர் என சான்று தடையில்லாமல் (இனணயதளம் மூலம்) வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். *மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மருத்துவம், பொறியியல், கலை […]







