தூத்துக்குடி மாவட்ட கனமழையின் போது மீட்பு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கீதா ஜீவன்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில் வடகிழக்கு பருவமழைக்காக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்ட முழுமைக்குமான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளிட்டவைகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட உள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம்? எப்படி பருவமழைக்கு […]







