பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி பிளஸ் 2 மாணவர் தங்கம் வென்று சாதனை
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 17 10 2025 அன்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக் கான பளுதூக்கும் போட்டியில் 79 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று கோவில்பட்டியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் கருப்பசாமி சாதனை படைத்துள்ளார். இவர் தமிழக அரசு சார்பில் ரூ. 1லட்சத்திற்கான காசோலையும் பதக்கமும் பெற்றார்..மாணவர் கருப்பசாமி கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் செந்தில்குமார் என்பவரின் மகனான கருப்பசாமி பள்ளி கல்வித்துறை SGF சார்பாக வேலூரில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியிலும் வெற்றி பெற்று மாநில அளவில் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.
மாணவர் கருப்பசாமியை பள்ளி தாளாளர் அருட்திரு அருள்ராஜ் அடிகளார் உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ் ஷான் உடற்கல்வி ஆசிரியர் ஆரோக்கிய முத்துராஜ் மற்றும் இருபால் ஆசிரியர்களும் பாராட்டினார்கள்







