குறைவான முன்பதிவு; 4 சிறப்பு ரெயில் சேவைகள் ரத்து
குறைவான பயணிகள் முன்பதிவு காரணமாக, பின்வரும் 4 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1. டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – கோட்டயம் சிறப்பு ரெயில் (எண் 06121) இன்று (22-ம் தேதி) மாலை 15.10 மணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. கோட்டயம் – டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (எண் 06122) 2025 நாளை (23-ம் தேதி) மதியம் 14.05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
3;. செங்கல்பட்டு – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரெயில் (எண் 06153) 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாலை 15.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. திருநெல்வேலி – செங்கல்பட்டு அதிவிரைவு சிறப்பு ரெயில் (எண் 06154) 2025 அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 4மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.







