தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும். சென்னைக்கு தென்கிழக்கில் 790 கி.மீ., ஆந்திர பிரதேசத்திற்கு தென்கிழக்கில் 850 கி.மீ. தொலைவில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே 840 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் இருந்து தெற்கு தென்கிழக்கே […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த (22/10/2025) அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27/10/2025 அன்று சூரசம்ஹாரம் 28/10/2025 அன்று திருக்கல்யாணம் நிகழ்வுடன் நிறைவுபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பெருமளவு கூடுவார்கள். இந்த நிலையில், திருக்கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் பக்தர்கள் தாங்கும் இடங்களை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி […]
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த 4வது வார்டு திமுக கிளைச் செயலாளர் சபரி ராஜன்.. இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றினர். இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் […]
கோவில்பட்டி-பசுவந்தனைச் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே 2 பேர் நேற்று முன்தினம் இரவு கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்தனராம். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அரிவாளை கீழே போட்டுவிட்டு தப்பி […]
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அன்பு பிரகாஷ். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கொள்ளையன் ஒருவன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை அபகரித்ததாக இவர் மீது வழக்கு நடந்து வருகிறது. ஏற்கனவே இவரது வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் மேற்படி திருட்டு நகைகள் இருந்ததும் அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் லஞ்ச […]
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: 27, 28-ந் தேதிகளில் வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள்
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கி வருகின்ற 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான வருகின்ற 26.10.2025 மற்றும் 27.10.2025 ஆகிய இரு தினங்கள் […]
கோவில்பட்டியில் முதலமைச்சர் திறந்து வைக்கும் திமுக கட்சி அலுவலகம்; அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் 3 சென்ட் நிலத்தில் திமுக நகர கழகத்திற்கு புதிதாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் இரண்டு ,மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் முகப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தின் ஒரு பகுதியில் நூலகமும் இடம்பெற்றுள்ளது. வரும் 28ந்தேதி மாலையில், தென்காசி செல்லும் வழியில் கோவில்பட்டிக்கு வருகை தரும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, கருணாநிதி உருவசிலையை திறந்து […]
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் சுமார் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை சேருகிறார்கள். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்காத காரணத்தினால், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்திருந்தது. […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்பட்டி வருகை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் சென்னை கழகத்திற்கு தலைமையகமான அண்ணா அறிவாலயம் மட்டுமின்றி, மாவட்டங்கள் தோறும் கட்சி அலுவலகங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் கடந்த 1.10.2000 அன்று அப்போதைய ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுகவுக்கென தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் கலைஞர் அரங்கம் என்,..பெரியசாமியால் கட்டப்பட்டு அப்போதைய முதலமைச்சரான கலைஞர் திறந்து வைத்தார். .தற்போது […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில், கடந்த 16-ந்தேதி மக்காச்சோள வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரியநாச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 40), கழுதூரைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்களான கனிதா(35), பாரிஜாதம்(40), சின்னப்பொண்ணு(எ) ராஜேஸ்வரி(41) ஆகிய 4 பேர் இடி மின்னல் தாக்கியதில், விவசாய நிலத்திலேயே உயிரிழந்தனர். 4 பெண்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானது இல்லை […]







