கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
கோவில்பட்டி-பசுவந்தனைச் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே 2 பேர் நேற்று முன்தினம் இரவு கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்தனராம். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அரிவாளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.
போலீசார் , இருவரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பாரதி நகர் அம்பேத்கர் தெரு \ரமேஷ் மகன் மணிகண்டன் (19), பாரதி நகர் 2 வது தெரு குமார் என்ற ராம்குமார் மகன் வேல்முருகன் (18) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.







