பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது மறந்துவிட்டதா? மறைந்த ஜவஹர்லால் […]
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 28 மற்றும் 29-ந்தேதிகளில் தென்காசி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தென்காசி செல்லும் வழியில் கோவில்பட்டி வருகிறார். நாளை பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வருகிறார். கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் நகர திமுக அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. முன் பகுதியில் கருணாநிதியின் முழுஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. திமுக கட்சி அலுவலகம் மற்றும் கருணாநிதி சிலையை மு,க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். […]
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பாஸ்கர் (வயது53) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் தவறான முறையில் தொட்டுப்பழகி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அவருடைய குடும்பத்தினரிடம் ஆசிரியரின் தவறான அணுகுமுறை குறித்து தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயாவிடம் சென்று பாலியல் தொல்லை குறித்து […]
வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. `மோன்தா’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. இந்நிலையில், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 680 கி.மீ. தொலைவிலும் புயலானது நிலை கொண்டிருந்தது. […]
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் நகர திமுக அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.தரைத்தளம் மற்றும் இரண்டு ,மாடிகளுடன் இந்த அலுவலகம்அமைந்து இருக்கிறது. அலுவலக முகப்பு பகுதியில் கருணாநிதியின் முழுஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. அலுவலகத்தின் ஒரு பகுதியில் நூலகம் இடம்பெற்றுள்ளது. 28ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை, தென்காசி செல்லும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வருகை தரும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதிய கட்சி அலுவலகம் மற்றும் கருணாநிதி உருவசிலையை திறந்து வைக்கிறார். கோவில்பட்டி நகர திமுக […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறவுள்ள நிலையில், தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் நெல்லை–திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06106) திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.06105) நெல்லையில் இருந்து நாளை நள்ளிரவு 11 மணிக்கு […]
உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பெசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் தினேஷ்குமார், முகமது இஸ்மாயில், மகேஷ், விஜயராமன் மற்றும் கிளை மேலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினர். இந்த முகாமில் மணாவர்களுக்கு தகுதி தேர்வு மற்றும் குழு விவாதம் நடத்தி சிறந்த மணாவர்களை தேர்வு செய்தனர். இறுதி ஆண்டு மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். 28 மாணவர்கள் தேர்ச்சி […]
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தனி நபர் வாகனங்களை தவிர்த்து , பொது போக்குவரத்தை பயன்படுத்த
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலின் 2025-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா 22.10.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவானது 28.10.2025 வரை நடைபெறவுள்ளது. 27.10.2025 அன்று மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், 28.10.2025 அன்று அதிகாலை 5.30 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், அன்று மாலை 6 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழா நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. கந்தசஷ்டி […]
தூத்துக்குடி தங்க பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் (வயது 57). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூமாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் சக்திமாலா கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் பின்னர் 17ம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் […]
எதற்கு முதல்-அமைச்சர் ஆனோம்? என்பதையே மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தஞ்சை அருகே காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று இருந்தார், அங்கு கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் […]







