கோவில்பட்டியில் புதிய திமுக அலுவலக கட்டிடத்தை கனிமொழி எம்,பி. பார்வையிட்டார்

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் நகர திமுக அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.தரைத்தளம் மற்றும் இரண்டு ,மாடிகளுடன் இந்த அலுவலகம்அமைந்து இருக்கிறது.
அலுவலக முகப்பு பகுதியில் கருணாநிதியின் முழுஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. அலுவலகத்தின் ஒரு பகுதியில் நூலகம் இடம்பெற்றுள்ளது.
28ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை, தென்காசி செல்லும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வருகை தரும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதிய கட்சி அலுவலகம் மற்றும் கருணாநிதி உருவசிலையை திறந்து வைக்கிறார்.

கோவில்பட்டி நகர திமுக புதிய அலுவலக கட்டிடத்தை திமுக துணை போத்துசெயலாளர் கனிமொழி எம்.பி., இன்று பார்வையிட்டார், அலுவலகத்திற்குள் நூலக அறையையும் பார்வையிட்டார்,
நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஶ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரச் செயலாளர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.







