கோவில்பட்டி கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 28 மாணவர்கள் தேர்வு
உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
பெசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் தினேஷ்குமார், முகமது இஸ்மாயில், மகேஷ், விஜயராமன் மற்றும் கிளை மேலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினர்.

இந்த முகாமில் மணாவர்களுக்கு தகுதி தேர்வு மற்றும் குழு விவாதம் நடத்தி சிறந்த மணாவர்களை தேர்வு செய்தனர். இறுதி ஆண்டு மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். 28 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணையை பெற்றனர்
.பணி நியமனம் செய்யயப்பட்ட மாணவர்களை கல்லூரி தாளாளர்விஜயன், முதல்வர் மற்றும் பேராசியர்கள் வாழ்த்தினார்கள். முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மகாராஜன், செந்தில்குமார், சித்ரா , செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.







