கோவில்பட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி, திருச்சி உள்பட 18 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜய கரிசல் […]
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்லக்கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை என பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கை மனு அதிகாரிகளிடம் வழங்கியும் தற்போது வரை பஸ்கள் நிறுத்தப்படவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அருண்பாண்டியன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பிரேம்குமார், மாரிமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சண்முகராஜா,சிவப்பிரகாசம், ஐ என் டி யு சி ராஜசேகரன்,மாவட்ட செயலாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், மாவட்ட பொருளாளர் கார்த்திக்காமராஜ், நகர நிர்வாகிகள் முருகேசன், பங்காருசாமி, முத்துராமலிங்கம்,பழனிசாமி,முருகன், […]
விடுதலை போராட்ட வீரர் மாவீரர் பூலித்தேவர் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக அன்னாரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் அபிராமிமுருகன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் துரைராஜ், உலக […]
அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா ? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது..நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையின போது, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது. குறிப்பாக சிறுபான்மை […]
இந்திய முந்திரி ஏற்றுமதி சந்தையில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி. இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டாலும் பண்ருட்டி முந்திரிக்கென்று தனிச்சுவை உண்டு. இதற்காக பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதிகளில் 28 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரிக்காடுகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. இங்கு ஆண்டுதோறும் 22 ஆயிரத்து 168 டன் முந்திரி பருப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முந்திரி பருப்புகள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா, ரஷியா, சவுதிஅரேபியா, துபாய், ஓமன் உள்ளிட்ட […]
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பானோத் ம்ருகேந்தர் லால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசுத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு இருந்தார், இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சியின் 17வது ஆணையராக பிரியங்கா பதவி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாநகராட்சி புதிய ஆணையராக பதவி ஏற்றபிறகு பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறும்போது “மக்களுடைய குறைகளை உடனுக்குடன் தீர்ப்பேன் […]
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றவையாகவும், செயல்படுகின்றன. சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் […]







