“தூத்துக்குடியை எழில்மிகு மாநகராக மாற்றுவேன்”- மாநகராட்சி புதிய ஆணையர் பிரியங்கா உறுதி
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பானோத் ம்ருகேந்தர் லால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசுத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு இருந்தார்,
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சியின் 17வது ஆணையராக பிரியங்கா பதவி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாநகராட்சி புதிய ஆணையராக பதவி ஏற்றபிறகு பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறும்போது “மக்களுடைய குறைகளை உடனுக்குடன் தீர்ப்பேன் தூத்துக்குடியை எழில்மிகு சுகாதாரமான மாநகராக மாற்றுவேன். திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.







