மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: உக்ரைன் போரை தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனால் இந்தியா குறி வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது வழக்கமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் ஐரோப்பாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யத்தொடங்கின. போர் தொடங்கியபோது ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஆதரித்தது. இந்திய நுகர்வோர் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் பெறுவதை உறுதி செய்வதே இந்தியா கச்சா எண்ணெய் […]
கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் நேற்று முதல் வீட்டிலிருந்து பொதுமக்கள் தபால்களை பதிவு செய்தல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தபால் சேவை தொடங்கியது. கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தபால் சேவை தொடக்க விழா நடந்தது. சேவையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- , கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை தபால் நிலையங்கள், 61 துணை மற்றும் 280 கிளை தபால் நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப […]
தமிழக டிஜிபி நியமனம் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வருகிற 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவும், அவரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வது […]
தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகள் முள்ளக்காடு கிராமம் பகுதி 1 மற்றும் 2.ஆக இருந்து வருகிறது, இந்த கடலோர பகுதிகளில் உப்பு உற்பத்தியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். முள்ளக்காடு முத்தையாபுரம் அத்திமரப்பட்டி, எம் சவேரியார்புரம்,பழையகாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள், சங்கம் அமைத்து,தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவன தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்க இடங்கள் ஆய்வு […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 32,554 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 49,845 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 1,230 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 முடிவுற்ற திட்டங்களின் வணிக […]
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : – தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முதன்மையாக கொண்டு நம்முடைய திராவிட மாடல் அரசு அதற்கான கட்டமைப்புகளை மிக சிறப்பான வகையில் உருவாக்கியிருக்கிறது. 2024-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த, தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி. ராஜா கடுமையாக உழைத்துகொண்டு இருக்கிறார். பல நாடுகளுக்குசென்று, வெளிநாட்டு முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து குவிக்கிறார். முத்து நகர் […]
டெல்லியில் நடைபயிற்சி சென்ற போது மயிலாடுதுரை காங்கிரஸ் எம்.பி சுதாவிடம் இருந்து மர்ம நபர் 4 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமித்ஷாவுக்கு சுதா எம்.பி கடிதம் எழுதியுள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக்கூடிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் வந்து, என்னிடம் இருந்து […]
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருநெல்வேலியில் உள்ள தனியார் ஹோட்டலில் விவசாய மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து உரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது; இயற்கை விவசாயத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசினீர்கள். நாம் உடல்நலத்தோடு வாழ்வதற்கு இயற்கை விவசாயம் மூலம் விளையும் உணவுகளை அதிகம் உண்ண வேண்டியது அவசியம். அப்போதுதான் எந்த நோயும் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். இன்று இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் மீது […]
பா.ம.க. தலைவர் அன்புமணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,-தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு எந்த நிமிடமும் வெளிவரலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. தி.மு.க அரசின் சுரண்டல் கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையை நடத்தவே வழியின்றி தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு அவர்களின் துயரத்தை அதிகரிக்கும். அந்த வகையில் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.தனியார் பேருந்துகளின் கட்டணத்தை […]
தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலையில் தயாரான மின்சார கார்கள்; முதல் விற்பனையை முதல்- அமைச்சர்
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.வின்பாஸ்ட் […]







