தூத்துக்குடி உப்பளம் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க கடும் எதிர்ப்பு
தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகள் முள்ளக்காடு கிராமம் பகுதி 1 மற்றும் 2.ஆக இருந்து வருகிறது, இந்த கடலோர பகுதிகளில் உப்பு உற்பத்தியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முள்ளக்காடு முத்தையாபுரம் அத்திமரப்பட்டி, எம் சவேரியார்புரம்,பழையகாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள், சங்கம் அமைத்து,தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவன தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

இதனால் உப்பள தொழிலில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முள்ளக்காடு ஊர் முகப்பில் உப்பு உற்பத்தியாளர்கள் சேகர், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், பாலசுப்பிரமணியன், மகாராஜன், பொன்ராம்,ஊராட்சித் தலைவர் கோபிநாத் நிர்மல், துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர், தகவலைத் தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்பிற்காக வந்தனர்,
ஆனால் நீண்ட நேரமாக யாரும் வராததால், அனைவரும் கலைந்து சென்றனர், இந்நிலையில் ரகசியமாக கடலோரப் பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து ஆய்வு நடத்த முயற்சிநடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு உடனடியாக நேரில் சென்ற உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த கிராம நிர்வாக அதிகாரிகள் திருவேங்கட செல்வி மற்றும் பிரேமலதா ஆகியோர் தீவிர முயற்சி எடுத்தனர்.’

இதனால் எந்தவிதஆய்வும் நடக்கவில்லை. அங்கு வந்த வந்த சில அதிகாரிகள் திரும்பி சென்று விட்டனர்,
இந்நிலையில் தன்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் மந்திரமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடி முதல் புன்னக்காயல் வரை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் இதனை தொழில் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளோம்.ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழில் தொடங்க இருப்பதாக கூறப்படுவது நியாயமா? ஒரு லட்சம் மக்களுக்கு அரசு துணை நிற்க வேண்டாமா? உப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.







