இந்தியாவை அமெரிக்கா குறிவைப்பது நியாயமற்றது; மத்திய வெளியுறவுத்துறை கண்டனம்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
உக்ரைன் போரை தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனால் இந்தியா குறி வைக்கப்பட்டுள்ளது.
இது நியாயமற்றது வழக்கமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் ஐரோப்பாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யத்தொடங்கின. போர் தொடங்கியபோது ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஆதரித்தது.

இந்திய நுகர்வோர் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் பெறுவதை உறுதி செய்வதே இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் நோக்கம்.
இந்தியாவை விமர்சனம் செய்யும் நாடுகளே ரஷியாவிடம் வர்த்தகம் செய்கின்றன. ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மட்டுமின்றி உரம், கனிம பொருட்கள் வேதிப்பொருட்கள், இரும்பு, எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்கின்றன.
அமெரிக்காவும் ரஷியாவிடமிருந்து அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம், மின்சார கார் உற்பத்திக்கு தேவையான பலோடியம், உரங்கள், வேதிப்பொருட்களை கொள்முதல் செய்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவை அமெரிக்கா குறிவைப்பது நியாயமற்றது. ஒவ்வொரு பொருளாதார நாடுகளை போன்றே இந்தியாவும் அதன் தேசிய, பொருளாதார நலன்களை காக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும்
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







