திமுகவின் தோல்வி தெற்கு திசையில் இருந்து ஆரம்பிக்கிறது : தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- “தெற்கு தேய்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் யாரும் தென்பகுதியை முன்னேற்ற வில்லை. ஆனால் இன்று பார்த்தால் விமான நிலையமாக இருந்தாலும் சரி, துறைமுகமாக இருந்தாலும் சரி பாரதப் பிரதமர் மிகப் பெரிய வளர்ச்சியை கொடுத்துள்ளார். நான் இங்கு தேர்தலில் நிற்கும் போது விரிவடையும் எல்லா வசதிகளும் வரும் என்று சொன்னேன். ஆனால் எல்லோரும் கிண்டல் செய்தனர். ஆனால் இன்று அதே வளர்ச்சி வந்து கொண்டிருக்கிறது. […]







