நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கான பண்பாட்டுப்போட்டி
விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரி கிராம முன்னேற்றத் திட்டம் கோவில்பட்டி கிளை சார்பாக நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கான பண்பாட்டுப்போட்டி கோவில்பட்டி செளபாக்யா மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சி கே டி நர்சரி பிரைமரி பள்ளி ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திரம் பொறுப்பாளர் பரமகுரு முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லுதல், ஒப்பித்தல், இசை,ஓவியம்,பேச்சு,தனி நடிப்பு, திருக்குறள் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு திருவள்ளுவர் மன்றம் துணைத் தலைவர் திருமலை முத்துசாமி பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கஸ்தூரிபா பள்ளி தாளாளர் சரஸ்வதி சுபா, கேந்திர அன்பர், யோகா பயிற்சியாளர் வேலுச்சாமி, பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், தன்னார்வ தொண்டர்கள், கேந்திர பால சேவிகாக்கள்,பாலர் பள்ளி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்







