கோவில்பட்டி கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) ஆங்கிலத் துறை “மாணவர் ஆதரவு திட்டம் – 2025” நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார்,.
கல்லூரி இயக்குநர்.மகேஷ் குமார் தலைமை தாங்கி பேசினார். ஆங்கிலத் துறைத் தலைவர் செல்வசுந்தரி, , , சிறப்புரை ஆற்றினார்.

யு.பி.மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 120 பேர் இந்த ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். மாணவர்களுக்கு முதல் அமர்வாக கேட்பது, பேசுவது, படிப்பது மற்றும் எழுதுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது,
காலை 11 மணி முதல் 12.30 வரை ஆங்கில மொழித்திறன் ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியை தொடர்ந்து . மதிய உணவுக்குப் பின் இரண்டாம் அமர்வாக மொழியியல் அகராதி செயல்பாடுகள் (Vocabulary Activities) பிற்பகல் 1. மணி முதல் 2. மணி வரை நடைபெற்றது.

யுபிஎம்எஸ் ஆசிரியர்கள் பின்னூட்டம் அளித்தபின், நிகழ்ச்சியின் நிறைவாக முதுகலை முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி மாலினி நன்றி கூறினார். முதுநிலை மாணவர்கள், துறைத் தலைவர். செல்வசுந்தரி மற்றும் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் இன்னொரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகள் 120 பெரும் மொழி ஆய்வகம்) மற்றும் சிப்பி காளான் பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
சிப்பி காளான் வளர்ப்பு பற்றிய தகவல்கள், பண்ணை அமைத்தல், கொட்டகைகள் நிறுவுதல் மற்றும் உகந்த வெப்பநிலை பராமரிப்புக்கான உபகரணங்களைப் பராமரித்தல் போன்ற நடைமுறை விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.







