கிழவிபட்டி கிராமநிர்வாக அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி தாலுகா கிழவிபட்டி கிராம நிர்வாக அலுவலர் சுடலைமுத்துகிருஷ்ணனை கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கோவில்பட்டி சப்கலெக்டர் அலுவகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் இ.கதிரேசன் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், ஒன்றியச்செயலாளர் மாடசாமி, வழக்கறிஞர் பாபு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லய்யா, ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் துரைராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி அருள்தாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், ஆவல்நத்தம் லட்சுமணன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிழவிபட்டி கிராம நிர்வாக அலுவலர் சுடலைமுத்துகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை ஒருமையிலும், தரக்குறைவாகவும், ஏளனமாகவும் பேசுவதை கண்டித்தும், நிலம் சம்பந்தமான ஆவண நகல்களை பொதுமக்கள் கேட்டு செல்லும்போது கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்பதை கண்டித்தும் மேற்படி கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சப்கலெக்டரிடம், ஆர்ப்பாட்டக்குழுவினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.







