கோவில்பட்டியில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு பேரணி, பொதுக்கூட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தூத்துக்குடி மாவட்ட 12-வது மாநாடு தொடக்க விழா நேற்று மாலை கோவில்பட்டியில் நடைபெற்றது
மாநாட்டின் தொடக்கமாக காந்தி மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணிக்கு மாவட்டச் செயலாளர் பூமயில் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மல்லிகா பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு,மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக கிருஷ்ணன் கோவில் ரோடு பகுதியில் நிறைவடைந்தது.

அங்கு,பொதுக்கூட்டம் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா சிறப்புரையாற்றினார். மத்தியக்குழு உறுப்பினர்கள் பொன்னுத்தாய், சசிகலா, மாவட்ட தலைவர் கலைச்செல்வி பொருளாளர் சித்ராதேவி, மாவட்ட நிர்வாகிகள் கமலம், ஜானகி, ராமலட்சுமி, வரவேற்பு குழு தலைவர் சுந்தரி,மாவட்டக்குழு உறுப்பினர்கள் லட்சுமி, சித்ரா,மாரியம்மாள், நகரத் தலைவர் குருவம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இன்று (11-ம் தேதி) கடலையூர் ரோடு பைரவா மஹாலில் மாநாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலி வழங்க வேண்டும். அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். கோவில்பட்டி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.







