இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் (NHAI) மூலம் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேரமும் இயங்கும் மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியினை, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் நேற்று தொடங்கி வைத்தார். இந்துஸ்தான் லைப் கேர் லிமிடெட் (HLL) நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் NHAIஉடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இலவச அவசர கால ஊர்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் […]
தினமும் எழுந்ததும் டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி ஜூஸ் தயாரித்து பருகினால் குடல் முழுமையாக சுத்தமாகும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த வெண் பூசணியை ஜூஸ் செய்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெண்பூசணியில் நார்ச்சத்து நீர்ச்சத்து, கலோரி, இரும்பு,மெக்னீசியம், விட்டமின் பி மற்றும், வெண்பூசணியில் இருக்கின்ற நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. குடல் இயக்கம் மற்றும் செரிமான இயக்கம் சீராக நடைபெற வெண்பூசணி சாறு தயாரித்து பருகலாம். பூசணிஜூஸ் பருகினால்:இரத்தத்தில் உள்ள சர்க்கரை […]
ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் 96 . இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மார்கழி ,தை, மாசி ,பங்குனி மாதங்களின் க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் […]
தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி நாறும்பூநாதன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66. நேற்று காலை நடைபயிற்சி சென்ற போது மயக்கம் ஏற்பட்டு வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. தூத்துக்குடி மாவட்டம் கழுக மலையை சேர்ந்த நாறும்பு நாதன் தனது பள்ளி, கல்லூரி படிப்பை கோவில்பட்டியில் முடித்தார். திருமணத்திற்கு பின், குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார். .அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கல்லூரி […]
>மலையாளத்தில் `ஆர் டி எக்ஸ்’ `ஒரு வடக்கன் செல்பி’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நீரஜ் மாதவ். தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் அவரது நண்பராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார். `தி பேமிலி மேன்’ வெப் சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ இயக்கத்தில் வெளியான `ஜவான்’ திரைப்படத்தில் நடிக்க மறுத்தாக நீரஜ் மாதவ் கூறி இருக்கிறார். இது […]
போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார்.தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சண்டக்கோழி-2’, ‘சர்க்கார்’, ‘மாரி-2’, உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி நடித்துள்ளார். < மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருக்கு கடந்த ஆண்டு நிகோலய் என்பவருடன் திருமணம் நடைபெற்றநிலையில், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கையில் கட்டுடன் வரலட்சுமி வீடியோ […]
விவேக் பிரசன்னா நாயகனாக நடித்துள்ள படம் ‘டிராமா’ . அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆர் எஸ் ராஜ்பரத் இசையமைக்கிறார். தம்பிதுரை மாரியப்பன் இயக்கும் இந்த படத்தை டர்ம் புரொடக்சன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிக்கிறார். விவேக் பிரசன்னாவுடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜார்னரில் தயாராகி உள்ள இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் […]
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமலை, பாலசுப்பிரமணியன், தனிப்பிரிவு போலீசார் அருணாசலம் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் தலா 60 கிலோ எடை கொண்ட 22 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரில் இருந்தது பாண்டவர்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பூல்சாமி மகன் […]







