‘ஜவான்’ படத்தில் நடிக்க மறுத்த மலையாள நடிகர் நீரஜ் மாதவ்

>மலையாளத்தில் `ஆர் டி எக்ஸ்’ `ஒரு வடக்கன் செல்பி’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நீரஜ் மாதவ். தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் அவரது நண்பராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார்.
`தி பேமிலி மேன்’ வெப் சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ இயக்கத்தில் வெளியான `ஜவான்’ திரைப்படத்தில் நடிக்க மறுத்தாக நீரஜ் மாதவ் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக நீரஜ் மாதவ் கூறுகையில், “ஜவான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்போல எனக்கு தெரியவில்லை. அதே சமயம் , அப்போது எனக்கு மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் கொஞ்சம் கூட இல்லை. அதனால் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். இதற்காக பலரும் என்னை திட்டினார்கள். ஆனால் நான் பெரிதாக எதையும் இழந்ததாக நினைக்கவில்லை” என்றார்.
