குடலில் ஒரு துளி கழிவைகூட விட்டு வைக்காத ஜூஸ்…
தினமும் எழுந்ததும் டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி ஜூஸ் தயாரித்து பருகினால் குடல் முழுமையாக சுத்தமாகும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த வெண் பூசணியை ஜூஸ் செய்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வெண்பூசணியில் நார்ச்சத்து நீர்ச்சத்து, கலோரி, இரும்பு,மெக்னீசியம், விட்டமின் பி மற்றும், வெண்பூசணியில் இருக்கின்ற நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. குடல் இயக்கம் மற்றும் செரிமான இயக்கம் சீராக நடைபெற வெண்பூசணி சாறு தயாரித்து பருகலாம்.
பூசணிஜூஸ் பருகினால்:இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாக வெண்பூசணி சாறு செய்து பருகலாம்.
ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யும் மருந்தாக இது திகழ்கிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வெண்பூசணி சாறு பருகலாம்.
தினசரி வெண்பூசணியை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் வெண் பூசணிக்கு இருக்கிறது.
ஜூஸ் தயாரிக்கதேவையான பொருட்கள்:-
வெண்பூசணி துண்டுகள் – கால் கப்(தோல் நீக்கப்பட்டது) தண்ணீர் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-.முதலில் ஒரு கீற்று வெண்பூசணியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். .பிறகு இதனை மிக்சி ஒன்றில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
.இந்த வெண்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி காலை வேளையில் பருகி வந்தால் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறும்.இந்த வெண்பூசணி துண்டுகளுடன் உப்பு,மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்தும் பருகலாம்.







