• June 8, 2025

Month: October 2024

செய்திகள்

மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: தேதியை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

இரு மாநில சட்டமன்றகளின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு, அங்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மஹாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்கண்டில் இரு கட்டமாகவும் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மஹாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும்., 82 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.இங்குள்ள 82 தொகுதிகளில் ஒரு இடத்திற்கு நியமன உறுப்பினர் நியமிக்கப்படுவார். இந்த நிலையில் இரு மாநில சட்டமன்ற தேர்தலுக்கான […]

செய்திகள்

வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்: வெற்றியை கொண்டாடிய படகுழு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில்,ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. வேட்டையன் திரைப்படம் தற்போது வரை உலகளவில் 240 கோடி ரூபாய் […]

செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணியில் மாற்றம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்கலாம்: பிரேமலதா

வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் சென்னை,மதுரை,கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது.மேலும் சென்னைக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக […]

சினிமா

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் அப்டேட் வெளியீடு

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்களுக்கிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். எல்.ஐ.கே படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா […]

செய்திகள்

தமிழக மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பொதுமக்கள் அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். அதில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படுகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால்,பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். […]

செய்திகள்

சென்னையில் கனமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது . குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.. கனமழையால் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது இந்த நிலையில் ,சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை பேசின் மேம்பாலத்தில் மழை நீர் அகற்றும் பணிகளை  முதல்-அமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார். மழை நீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் முதல்-அமைச்சர் […]

செய்திகள்

அப்துல்கலாம் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

“கல்வியும், நெஞ்சில் கனவும், அதை நனவாக்கத் தேவையான கடும் உழைப்பும் இருந்தால் உயர்வு நம்மைத் தேடி வரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களிடம் விதைத்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்  பிறந்தநாள் இன்று நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அப்துல் கலாம் அவர்களுக்கு அவர் பயின்று – பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து, கடந்த ஆண்டு திறந்து வைத்தோம். அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றுக்குப் பாடுபடும் தமிழர்களுக்கு, ஆண்டுதோறும் […]

செய்திகள்

கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுருந்தார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளை (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள […]

செய்திகள்

இந்திய தூதர்கள் வெளியேற்றத்துக்கு இந்தியா பதிலடி; கனடா தூதர்கள் 6 பேர்  வெளியேற

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் பயங்கரவாதி என கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். , காலிஸ்தான் உறுப்பினரான நிஜ்ஜார், சர்ரே நகரில் குருத்வாரா ஒன்றிற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூனில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் தன்னிடம் உள்ளன என அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடோ கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் இந்தியா மறுத்தது. உள்நோக்கத்துடன் […]