வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்: வெற்றியை கொண்டாடிய படகுழு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில்,ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. வேட்டையன் திரைப்படம் தற்போது வரை உலகளவில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இத்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வெற்றியை கொண்டாடியுள்ளனர்.அப்போது எடுத்து கொண்ட புகைப்படத்தை படகுழு இணையத்தில் பதிவிட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
