• June 8, 2025

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் அப்டேட் வெளியீடு

 ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் அப்டேட் வெளியீடு

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்களுக்கிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

எல்.ஐ.கே படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

இந்தநிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்றை படகுழு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளிட்டுள்ளது. அதில், ‘தீமா’ என்ற பாடல் நாளை காலை 10.06 மணிக்கு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *