தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். இவர் தற்போது ‘சார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ‘கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் […]
நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில்,மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைக்கும் பணிகளை தேசிய மாநாடு கட்சி முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 10ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. […]
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் வாரிசு, தெலுங்கில் கீத கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரலானது. நடிகைகளின் ‘டீப் பேக்’ ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த தொழில்நுட்பத்தில் நடிகைகளின் முகத்தை ஆபாச நடிகைகள் உடலில் பொருத்தி நிஜமானது போலவே மார்பிங் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் டி.ஏ. எனப்படும் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு, பணவீக்கத்தைப் பொருத்து ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. அந்த வகையில், தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு […]
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் சமீபத்தில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற விவகாரத்தில் சிக்கினார். இதனிடையே ஸ்ரீநாத் பாசி தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது எர்ணாகுளத்தில் காரில் சென்றபோது, அவரது கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது பஹீம் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் நடிகர் ஸ்ரீநாத் பாசி சம்பவ […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு, முக்கிய சேவைத்துறைகளை தவிர, பிற அரசு துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும்,பெரிய […]
வடகிழக்கு பருவமழை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மிதி, துடுப்பு, மோட்டார் உள்ளிட்ட படகு சவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் வாரிசு, தெலுங்கில் கீத கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரலானது. நடிகைகளின் ‘டீப் பேக்’ ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த தொழில்நுட்பத்தில் நடிகைகளின் முகத்தை ஆபாச நடிகைகள் உடலில் பொருத்தி நிஜமானது போலவே மார்பிங் செய்து […]
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். எல்.ஐ.கே படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா; நாளை மறுநாள் கொடியேற்றம்
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் (18.10.2024) வெள்ளிக்கிழமை தொடங்குகிறது, இதையொட்டி காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது. தொடர்ந்து 29.10.2024 வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மண்டகபடிதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்: ம.அன்புமணி, ): உதவி ஆணையர் (கூ.பொ) ஜி.செல்வி, செயல் அலுவலர்: கி.வெள்ளைச்சாமி., அறங்காவலர் குழு தலைவர் […]