• June 8, 2025

கல்வி எல்லாருடைய அடிப்படை உரிமை என்பதை ரொம்ப அழகாக சொல்கிற படம் ‘சார்’ – விஜய் சேதுபதி

 கல்வி எல்லாருடைய அடிப்படை உரிமை என்பதை ரொம்ப அழகாக சொல்கிற படம் ‘சார்’ – விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். இவர் தற்போது ‘சார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ‘கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில்,திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், நடிகர் விஜய் சேதுபதி படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இதனை படகுழு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில் அவர் , கல்வியின் மகத்துவம், கல்வியின் தேவை, கல்வி என்பது எல்லாருடைய அடிப்படை உரிமை என்பதை ரொம்ப அழகாக சொல்கிற படம் இது. ஒரு குழந்தைக்கு போய் சேருகின்ற கல்வியை தடுத்து நிறுத்துவது அந்த கடவுளாக இருந்தாலும் சரி அது தவறு என்பதை இந்த படம் பேசுகிறது”. கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி போய் சேர வேண்டும் என்று ஆசிரியர் எடுக்கும் முயற்சி தான் இந்த ‘சார்’ என படத்தை பாராட்டி பேசியுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *