சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- விவசாயத்திற்கும் சரி குடிநீருக்கும் சரி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீர் ஆதாரமாக நாம் நம்பி இருப்பது கேரளாவில் இருந்து வருகின்ற சிலந்தி ஆறு, கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரி ஆறு, அதேபோல ஆந்திராவில் இருந்து வருகிற பாலாறு. அதிமுக ஆட்சியில் உரிய நடவடிக்கைகள் எடுத்து நமக்குரிய உரிமையை முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் நிலை நாட்டினார்கள். இந்தியா கூட்டணியில் […]
கலை, இலக்கிய கோடை கொண்டாட்டம்: பல்லாங்குழி, தாயம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்ற
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தின் 4ம் நாள் நிகழ்வாக சிறுவர் சிறுமியர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்வேறு பள்ளிகளின் சார்பாக 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிட்டிகுச்சி, பல்லாங்குழி,பம்பரம் சுழற்றுதல்.தாயம்.தட்டாங்கல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி அசத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி தலைமை […]
கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை தாங்கினர் .முதல் போட்டியை முன்னாள் இந்திய […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படும்போது, பள்ளிகள் திறப்பு தள்ளிபோகும். நடப்பாண்டு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியாகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு ஜூன் 2-வது வாரம் வரையில் தள்ளிபோக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது இந்த நிலையில், தமிழகத்தில் 2024-2025 -ம் கல்வியாண்டில் […]
கோவில்பட்டி தெட்சணவிநாயகர் கோவில் 60-வது ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம்,9 மணிக்கு மேல் கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி வருடாபிஷேகமும் நடந்தது. பின்னர் மூலவர் விநாயகருக்கு 21 வகையான திரவியங்களுடன் அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. அன்னதானத்தை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் கோவில் தலைவர் மாரிமுத்து, செயலாளர் சிவகணேஷ் குமார், வழக்கறிஞர் […]
கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் வைகாசி விசாகம் விழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு மஞ்சள் பால் தேன் என 18 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோவில்பட்டி தாசில்தார் சரவண பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ராகவேந்திரா அறக்கட்டளை […]
திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தின் 139 – ம் ஆண்டு திருவிழா கடந்த 12-ம் தேதி மாலை நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நவநாள் நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு நாள் மாலையும் புனித சலேத் மாதாவின் திரு உருவம் தாங்கிய கொடி, மற்றும் புனித சலேத் மாதா மின் ரதம் போன்றவை ஜெபமாலை ஊர்வலத்துடன் நடைபெற்று நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புனித சலேத் மாதா திருவிழா கொடியேற்று […]
கோவில்பட்டி_செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு : பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன்,சுவாமி, அம்பாள் சண்டிகேஸ்வரர்) திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் […]
கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த பாலமுருகன் (வயது 32) என்பவர் பிளம்பராக உள்ளார் இவா் சக தொழிலாளியான இடைசெவல் கிராமத்தைச் சோ்ந்த மகாராஜன் (20) என்பவருடன் பசுவந்தனை சாலையில் பைக்கில் சென்றாா். அப்போது, 2 பைக்குகளில் பின்தொடா்ந்து வந்த 6 போ் பாலமுருகனின் பைக் மீது மோதினர் . பின்னர், அவதூறாகப் பேசி இருவரையும் தாக்கியதுடன், பைக்கிலிருந்த பிளம்பிங் பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர் . இதேபோல, சம்பவத்தன்று 17 வயது சிறுவன் தனது நண்பா்களுடன் பசுவந்தனை […]
கோவில்பட்டி சிந்தாமணிநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் திருக்கோவிலில் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. ஸ்ரீசிந்தாமணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை, அலங்கார தீபாராதனை உள்பட விசேஷ பூஜைகள் நடந்தது, 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் பால்ராஜ் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.







