கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிபோட்டி தொடக்கம் ; முதல் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி
கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை தாங்கினர்
.முதல் போட்டியை முன்னாள் இந்திய ஆக்கி வீரரும், சென்னை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளரும் கோவில்பட்டியை சேர்ந்தவருமான ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடக்கி வைத்தார்.


தொடக்க விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல் அனைவரையும் வரவேற்றார். மேலும், இவ்விழாவில் கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் சி.ராமசாமி, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் முனைவர் கே.காளிதாச முருகவேல், முனைவர் எஸ்.மதிவண்ணன் மற்றும் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், ஆக்கி வீரர்கள், ஆக்கி ரசிகர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவை தொடர்ந்து நடைபெற்ற முதல் லீக் போட்டியில் என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) – போபால் அணியும் இன்கம் டேக்ஸ் சென்னை அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இன்கம் டேக்ஸ் சென்னை அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மாலை 5 15 மணிக்கு நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் பேங்க் அணியுடன் ஒடிஷா டாடா நாவல் ஆக்கி அகாடமி அணி மோதுகிறது.
காலை 6 45 மணி அளவில் நடக்கும் 3வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியுடன் சென்னை இந்தியன் பேங்க் அணி மோதுகிறது.
இரவு 8 15 மணியளவில் நடக்கும் 4வது லீக் ஆட்டத்தில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியுடன் சென்னை தமிழ்நாடு லெவன் அணி மோதுகிறது.
கோவில்பட்டியில் தொடங்கி இருக்கும் ஆக்கி போட்டியானது, ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.







