கோவில்பட்டியில் வழிப்பறி திருடர்கள் 3 பேர் கைது
கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த பாலமுருகன் (வயது 32) என்பவர் பிளம்பராக உள்ளார் இவா் சக தொழிலாளியான இடைசெவல் கிராமத்தைச் சோ்ந்த மகாராஜன் (20) என்பவருடன் பசுவந்தனை சாலையில் பைக்கில் சென்றாா்.
அப்போது, 2 பைக்குகளில் பின்தொடா்ந்து வந்த 6 போ் பாலமுருகனின் பைக் மீது மோதினர் . பின்னர், அவதூறாகப் பேசி இருவரையும் தாக்கியதுடன், பைக்கிலிருந்த பிளம்பிங் பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர் .
இதேபோல, சம்பவத்தன்று 17 வயது சிறுவன் தனது நண்பா்களுடன் பசுவந்தனை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகேயுள்ள தேநீா் கடை முன் நின்றிருந்தாா்.
அப்போது 2 பைக்குகளில் வந்த 3 போ், சிறுவனின் பைக்கை கேட்டனராம். தரமறுத்த அவரைத் தாக்கியதுடன், அவா் அணிந்திருந்த ஒன்றே கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர் . சிறுவன் கெட்டியாக பிடித்துக் கொண்ட தால் சங்கிலி துண்டானது.
பின்னர், சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அவரது பைக்கை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சிறுவனும், பாலமுருகனும் அளித்த புகாா்களின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோவில்பட்டி சாலைப்புதூா் பெருமாள்சாமி மகன் கண்ணன் (25), சாஸ்திரி நகா் சண்முகராஜ் மகன் சரவணகுமாா் (24), அன்னை தெரசா நகா் ரத்தினவேலு மகன் ரஞ்சித்குமாா் (27) ஆகிய 3 பேரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.







