கோவில் விழாவில் திருவிளக்கு பூஜை
கோவில்பட்டி சிந்தாமணிநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் திருக்கோவிலில் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
ஸ்ரீசிந்தாமணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை, அலங்கார தீபாராதனை உள்பட விசேஷ பூஜைகள் நடந்தது, 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் பால்ராஜ் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.







