கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வைகாசி விசாகம் பூஜை
கோவில்பட்டி_செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகளான
விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு 7 மணிக்கு : பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன்,சுவாமி, அம்பாள் சண்டிகேஸ்வரர்) திருவீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.







