கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் விழாவில் அன்னதானம்
கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் வைகாசி விசாகம் விழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு மஞ்சள் பால் தேன் என 18 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோவில்பட்டி தாசில்தார் சரவண பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் செந்தில்குமார், ராஜ்மோகன், தனபால், காளிராஜ்,மாடசாமி, கவுன்சிலர் லவராஜா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்







