கோவில்பட்டி தெட்சணவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழா
கோவில்பட்டி தெட்சணவிநாயகர் கோவில் 60-வது ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம்,9 மணிக்கு மேல் கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி வருடாபிஷேகமும் நடந்தது.
பின்னர் மூலவர் விநாயகருக்கு 21 வகையான திரவியங்களுடன் அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
அன்னதானத்தை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் கோவில் தலைவர் மாரிமுத்து, செயலாளர் சிவகணேஷ் குமார், வழக்கறிஞர் கணேச சுப்பிரமணியன், சிவக்குமார். காளிதாஸ், மாரிச்செல்வம்,வெங்கடேஷ், சக்திவேல் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.







