கனிமொழி தலைமையிலான குழு மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது- மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில், திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளரும், […]







