கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜை கும்ப கலச பூஜை தீபாராதனை நடத்தது. தொடர்ந்து அனுமன் உருவ படத்திற்கு வெற்றிலை மாலை,துளசி மாலை, வடை மாலை சாற்றி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி செய்தார். சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக […]
கோவில்பட்டியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் ; அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் இன்று அரசுத் துறைகளின் சேவைகள் பொதுமக்களுக்கு இன்னும் எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் முகாம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளி பயனாளிக்கு அங்கீகார சான்றிதழை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டி வட்டத்தில் மழை வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த 11 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் […]
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சார்பில் கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு இன்று மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணையை உடனே கைவிட வேண்டும்.டிட்டோஜாக் உயர்மட்ட குழுவுடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான அரசாணையை வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி […]
கோவில்பட்டி அன்னை தெரசா அறக்கட்டளை, சீட்ஸ் கூட்டமைப்பு,திட்டங்குளம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் ஆகியவை இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடின. அறக்கட்டளை தலைவர் அழகுலட்சுமி தலைமை தாங்கினார்.சீட்ஸ் செயலர் மெர்சில் முன்னிலை வைத்தார். பொங்கல் வைத்து கரும்புகள் படைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது விழாவில் தாசில்தார் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பூவன நாதசுவாமி கோவிலு டன் இணைந்த தேவி நீலாதேவி உடனுறை சுந்தர் ராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்து பிரசாதம் பெற்று சென்றனர். மாலை 6 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி பூரணம்மாள் காலனியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், அதுபோல, குலசேகரபுரம் ஊராட்சி பெருமாள்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று காலை 10:35 மணி அளவில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கிழக்கு ஒன்றிய பா. ஜனதா தலைவர் மாடசாமி வருகிற 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து பக்தர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கி அழைப்பிதழையும் அயோத்தி ராமர் கோவில் படங்களையும் வழங்கினார். 100க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் கொடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் அயோத்தி கோயில் திறப்பு விழா அன்று அனைத்து […]
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாய விலைக்கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் இன்று (10.1.2024) வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாய விலைக்கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் […]
அருகில் விளாத்திகுளத்தில் இருந்த சித்தவன்நாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, வேலிடுபட்டி, சிங்கிலி பட்டி, பேரிலோவன்பட்டி வழியாக கோவில்பட்டிக்கு செல்லும் அரசு பஸ் இன்று காலை புறப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தினால் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிரந்தர ஓட்டுநர் இருந்தும் தற்காலிக ஓட்டுநர் சுப்பிரமணி இந்த பஸ்சை இயக்கினார். இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்தனர். இந்த பஸ், சிங்கிலிபட்டி வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது. […]
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் , கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சந்தித்தனர். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நவாரண பணிகளுக்காக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.18 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது அமைச்சர் எ.வ.வேலு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், முனிரத்தினம், ராஜ்குமார், அசோகன், ஹசன் மவுலானா, கரு மாணிக்கம், அமிர்தராஜ், துரை.சந்திரசேகர், ராதாகிருஷ்ணன், […]







