தூத்துக்குடி மாவட்டத்தில் 960 நியாய விலைக்கடைகள் மூலம் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு; மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாய விலைக்கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் இன்று (10.1.2024) வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாய விலைக்கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் வேஷ்டி, சேலை அடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள அரிசி குடுப்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்;பங்கள் என மொத்தம் 5,26,561 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 960 நியாய விலைக்கடைகள் மூலமாக ரூ.56.65 கோடி மதிப்பில் மேற்படி ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படும்.
அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், பொருட்கள் வழங்கப்பட்டதும் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே வழங்கப்படும்.
.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முரளிகண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மண்டல மேலாளர் / துணை ஆட்சியர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) தமிழரசி, தனிவட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம், வடக்கு மண்டல தலைவர் நிர்மல், மாநகராட்சி 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாக்லின் ஜெயா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







