கோவில்பட்டி ராஜீவ் நகர் கோவிலில் பக்தர்களுக்கு அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ்
கோவில்பட்டி ராஜீவ் நகர் கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று காலை 10:35 மணி அளவில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கிழக்கு ஒன்றிய பா. ஜனதா தலைவர் மாடசாமி வருகிற 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து பக்தர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கி அழைப்பிதழையும் அயோத்தி ராமர் கோவில் படங்களையும் வழங்கினார்.

100க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் கொடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் அயோத்தி கோயில் திறப்பு விழா அன்று அனைத்து வீடுகளிலும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் சந்தானம் மற்றும் வேல்முருகன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர்அம்மன் மாரிமுத்து, மாற்று அணி பிரிவுகளின் மாவட்ட தலைவர்கள் ஒன்றிய நிர்வாகிகள், கற்பக விநாயகர் கோவில் கமிட்டி நிர்வாகிகளும் ராஜீவ் நகர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்







