ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
கோவில்பட்டி பூவன நாதசுவாமி கோவிலு டன் இணைந்த தேவி நீலாதேவி உடனுறை சுந்தர் ராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்து பிரசாதம் பெற்று சென்றனர்.
மாலை 6 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.







