நிவாரண நிதி வழங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் , கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சந்தித்தனர்.
அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நவாரண பணிகளுக்காக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.18 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது அமைச்சர் எ.வ.வேலு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், முனிரத்தினம், ராஜ்குமார், அசோகன், ஹசன் மவுலானா, கரு மாணிக்கம், அமிர்தராஜ், துரை.சந்திரசேகர், ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்,







