கோவில்பட்டியில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சார்பில் கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு இன்று மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடக்க கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணையை உடனே கைவிட வேண்டும்.டிட்டோஜாக் உயர்மட்ட குழுவுடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான அரசாணையை வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மணிமொழி நங்கை,செந்தில்குமரன்,லினலோ பிரின்ஸ் சாம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.செல்வராஜ், சுரேஷ்குமார், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இல.கருப்பசாமி தொடக்க உரையாற்றினார், செல்வராஜ், ராமமூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள்.ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.சுரேஷ் குமார் நன்றி கூறினார்.







