கோவில்பட்டி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன்
கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜை கும்ப கலச பூஜை தீபாராதனை நடத்தது. தொடர்ந்து அனுமன் உருவ படத்திற்கு வெற்றிலை மாலை,துளசி மாலை, வடை மாலை சாற்றி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி செய்தார். சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.







