கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திற்கு இன்று வருகை தந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறள்வழி நடக்க திருக்குறள் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளுவர் தின விழா,கோவில்பட்டி ரோட்டரிசங்கத்தின் 49வது ஆண்டு தொடக்க விழா ஜனவரி 16ம் தேதி(இன்று ) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு குறள் வழி நடக்க 200 க்கும் மேற்பட்ட திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் […]
கோவில்பட்டி 31வது வார்டு குழுமத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பொங்கல் தின விளையாட்டு போட்டிகள் புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.இதில் ஓட்டப்பந்தயம் சாக்கு ஓட்டம்,பாட்டிலில் நீர் ஊற்றுதல், ஸ்கிப்பிங், ஓவியம், சிலம்பம், கண்ணை கட்டி பொட்டு வைத்தல், கோலம்,உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 31 வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் பரிசுகளை வழங்கினார். விழாவில் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் திருப்பலியும் கலை நிகழ்ச்சிகளும்,விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றது. கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் காலை 6 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டு 7 மணிக்கு திருத்தல பங்குத்தந்தை அருட்திரு சார்லஸ் அடிகளார்,உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள் ள். பின்னர் இறைமக்கள் அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருத்தல கலையரங்கில் சமத்துவ பொங்கல் பற்றிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது அடுத்ததாக மியூசிக் சேர், கண்ணைகட்டி பானை உடைத்தல்,மற்றும் பல […]
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஒரு திருமண மண்டபம் அருகே எச். டி. எப். சி. வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த ஏ.டி.எம் மைய எந்திரத்தினை மர்ம நபர் ஒருவர் கழற்றி பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது ஏ.டி.எம் மையத்தில் எச்சரிக்கை அலாரம் அடித்தது.இதை எதிர்பாராத அந்த மர்ம நபர் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அலாரம் சத்தம் கேட்டு அந்த பகுதியில் வந்த சிலர் […]
கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர் திருநாள் கொண்டாடப்படும் தை மாதம் முழுவதும் ஆதார் மையம் செயல்படும். அனைத்து அஞ்சலகங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு கவுண்ட்டர் அமைத்து ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில் காலை 8 மணி […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசியாபார்ம்ஸ் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகாரமேஷ், உதவி ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆசியாபார்ம்ஸ் பாபு அனைவரையும் வரவேற்றார். இந்து மகாசபா ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் சர்மா,புனித சூசையப்பர் திருத்தல சார்லஸ்,டவுன் ஜாமியா பள்ளிவாசல் இமாம் முகமதுஅலிபாசில் அன்வாரி ஆகியோர் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலிட்டு சிறப்புரையாற்றினர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம்,சீனிவாசன் , […]
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் மாட்டுப்பொங்கல், அடுத்த நாள் காணும் பொங்கல் என களை கட்டும் விழாவை முன்னிட்டு 17 ம் தேதி வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து இன்று வெளியூர்களுக்கு மக்கள் படைஎடுத்தனர். முன்கூட்டியே ரெயில்கள் முன்பதிபு செய்து விட்டதால் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. இதே போல் ஆம்னி பஸ்களும் முன்பதிவு செய்து விட்டனர், அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. […]
கோவில்பட்டி ஏகே ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் சார்பில் மாணவர்களுக்கு கராத்தே தகுதி பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இலுப்பையூரணி ஏஞ்சல் பிரைமரி நர்சரி பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏஞ்சல் பள்ளி முதல்வர் பிரசன்னா தலைமை தாங்கினார். ஏகே ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் நிர்வாகி காசி மாரியப்பன் முன்னிலை வகித்தார். பல்வேறு பள்ளிகளிலிருந்து வருகை தந்த மாணவர்களுக்கு கராத்தேமாஸ்டர் விஜயராஜன் கராத்தே தேர்வுகளை நடத்தினார். கோவில்பட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் கலந்து கொண்டு […]
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை முதல் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை களைகட்டியது. தொடர் மழை காரணமாகக் கடந்த 2 வாரங்களாக ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்குச் சுமார் 10 ஆயிரம் ஆடுகள்வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருந்தன. 10 கிலோ […]
,தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் மக்கள் அனைவரும் சாதி மதம் வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட தயாராகி வருகின்றனர். வாழையடி வாழைபோல், பனையடி பனையாக நமக்கு பின்னரும் சந்ததியினர் தழைத்தோங்க வேண்டும் என்பதால் தைத்திருநாளில் பனைமரத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும்,பனங்கிழங்கு வழிபாடு முக்கியமானதாக உள்ளது. தென்மாவட்டங்களில் பனைமரங்கள் இல்லாத கிராமங்களே கிடையாது. பனை மரத்தில் அடி முதல் நுனிவரை அத்தனை பாகங்களும் இயற்கையுடன் ஒன்றி பயனளிக்க கூடியவை. முதலில் பதநீர், கருப்பட்டி, […]







