பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மக்கள் படையெடுப்பு
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் மாட்டுப்பொங்கல், அடுத்த நாள் காணும் பொங்கல் என களை கட்டும் விழாவை முன்னிட்டு 17 ம் தேதி வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து இன்று வெளியூர்களுக்கு மக்கள் படைஎடுத்தனர். முன்கூட்டியே ரெயில்கள் முன்பதிபு செய்து விட்டதால் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. இதே போல் ஆம்னி பஸ்களும் முன்பதிவு செய்து விட்டனர்,
அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதனால் இன்று சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகரித்தது. வெளியூர் பஸ்களில் ஏறி மக்கள் புறப்பட்டனர்.
இது தவிர இன்று காலையில் இருந்து கார்களில் அதிகம் பேர் பயணத்தை தொடர்ந்தனர். இதனால் சுங்கசாவடிகளில் நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 5 லட்சம் பேர் வரை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு படையெடுத்து இருப்பதால் நாளை சென்னை நகரம் வெறிச்சோடி காணப்படும்.







